Categories
மாநில செய்திகள்

“அது நா இல்லை, என்னோட அண்ணன்”… திருமணத்தை மறைத்து நிச்சயதார்த்தம்… காதலியின் குடும்பத்துக்கே அல்வா..!!

ஏற்கனவே திருமணமானதை மறைத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் என்ற பகுதியில் வசித்து வரும் 26 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வில்லான்டர் பெனட்ராயன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள நவம்பர் 20ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் வில்லான்டர் பெனட்ராயன் திருமண செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி பெண் வீட்டாரிடமிருந்து 3.50 லட்சம் ரூபாய் பணம் வாங்கி சென்றுள்ளார். பின்னர் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருப்பதை நண்பர்கள் அந்த பெண்ணிற்கு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பம் வில்லான்டர் பெனட்ராயன் வீட்டிற்கு சென்று விசாரித்த போது நாங்கள் இரட்டை பிறவி என்றும், தனது அண்ணனுக்கு திருமணமாகி இருப்பதாகவும், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து விசாரணை செய்தனர். அந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதியுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரிடம் பணம் கேட்டபோது அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். அந்த பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பெயரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெனட்ராயன் மற்றும் அவரது தாயார் சிலினாராயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |