பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி, அருண் பிரசாத், பரீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்து விட்டால் அனைத்து பிரச்சினையும் முடிந்து விடும். இருப்பினும் சீரியல் முடிய கூடாது என்பதற்காக பல டுவிஸ்டுகள் வைத்து இயக்குனர் கதையை நகர்த்தி வருகிறார். தற்போது கண்ணம்மாவிற்கு ஹேமா தனது இன்னொரு மகள் என்கிற பல நாள் ரகசியம் தெரிய வருகிறது. கண்ணம்மா, சௌந்தர்யா காட்சிகள் தான் இன்றும் இடம்பெற உள்ளது.
மேலும் சீரியல் முடியும்போது வெண்பாவை சௌந்தர்யா துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இருக்கும். இந்நிலையில் வெண்பா கேரக்டரில் நடித்து வரும் பரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘9-வது மாத கர்ப்ப காலத்தில் இப்படிப்பட்ட அதிரடி காட்சியில் நடித்தேன். என்னை பார்த்தால் எனக்கே பெருமையாக இருக்கிறது. அது நிஜ துப்பாக்கி. அதற்கான லைசன்ஸ் வைத்திருப்பவரின் உதவியுடன் புல்லட் இல்லாமல் ஸ்பார்க் மற்றும் புகை வருவது போல் இந்த காட்சியை எடுத்தோம்’ என தெரிவித்துள்ளார்.