Categories
சினிமா தமிழ் சினிமா

அது நிஜ பாம்பு இல்லை… விளக்கமளித்த சுசீந்திரன்… ஏற்றுக்கொண்ட வனத்துறை…!!

‘ஈஸ்வரன்’ திரைப்பட விவகாரத்தில் சுசீந்திரன் அளித்த விளக்கத்தை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டனர்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’  திரைப்படத்தில் சிம்பு பாம்பு ஒன்றை கையில் பிடித்திருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சைக்குள்ளானது . அந்தக் காட்சி நிஜ பாம்பை வைத்து படமாக்கப்பட்டதாக சந்தேகித்து ‘ஈஸ்வரன்’ படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

 

 

இதையடுத்து இயக்குனர் சுசீந்திரன், ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்டது ரப்பர் பாம்பு என்றும் அதற்கான ஆதாரங்களையும் நேரில் ஆஜராகி வனத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விளக்கினார். மேலும் ரப்பர் பாம்பு வைத்து தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்த காட்சிகளையும் காண்பித்துள்ளார். இதையடுத்து அந்த காட்சியில் இடம் பெற்றது நிஜ பாம்பு இல்லை என உறுதியாகி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

Categories

Tech |