சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பாரதிராஜா தனது பேட்டியில் “ஃபேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும். தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு உருவாக்கப்பட்ட தொடரின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் பாரதிராஜா அதே அமேசான் நிறுவன பெருமைகளை பேசி விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் பாரதிராஜாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். அதில் சிலர் கூறியிருப்பதாவது
“தமிழ், தமிழர் என்று கூவிவிட்டு தற்போது அதே அமேசான்காரன் காசு கொடுத்ததும் அவன் புகழ்பாடி விளம்பரத்தில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. இது தான் மக்களே இவரின் உண்மையான முகம் இதற்கும் ஏதாவது ஒரு விளக்கம் வைத்திருப்பார் பொறுத்திருந்து பார்ப்போம்.” என விமர்சித்துள்ளனர்.