Categories
அரசியல் மாநில செய்திகள்

அது முடிஞ்சு போன கதை…! அதுக்கு பரிகாரமே இல்ல.. சாக்கு போக்கு சொல்லாதீங்க..! எடப்பாடி சொன்ன பதில்…. எதுக்கு தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியிடம், மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளதை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு… இது எல்லாம் முடிந்து போன கதை. இனிமேல் அதற்கு பரிகாரமாக கிடைக்கப் போகிறது, கிடையாது. நாங்கள் முதலமைச்சராக இருந்தபோதும்…

அம்மா முதலமைச்சராக இருந்த போதும் தடை இல்லா மின்சாரம் கொடுத்தோம், மின்கட்டணத்தை ஏற்றவில்லை. பத்தாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தோம். அம்மா மறைவுக்குப் பிறகு நான் ஆட்சியில் தொடர்ந்து இருந்தேன் .  பல்வேறு பிரச்சினைகள் இருந்தது, இருந்தாலும் மக்கள் துன்பம் படுகின்ற போது மக்கள் பாதிக்காத அளவிற்கு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்தது.வேலை வாய்ப்பு கிடையாது, வருமானம் கிடையாது.

இந்த சூழ்நிலையில் மின் கட்டணத்தை ஏற்றினால் மக்கள் பாதிப்படைவார்கள். இது பெரும் சுமையாக மக்கள் கருதுகிறார்கள்.அதைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். அதே போல இதே ஆண்டு சொத்து வரியையும் உயர்த்து விட்டார்கள், நூறு சதவீதம், கடைக்கு 150 சதவிகிதம் எப்படி மக்கள் தாக்குப் பிடிப்பார்கள் ? ஒரு பக்கம் மின்கடன் உயர்வு, ஒரு பக்கம் சொத்து உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயர உள்ளது.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக தான் மின்கட்டணம் உயர்த்தியுள்ளோம் என சாக்குபோக்கு சொல்லி, மக்களை திசை திருப்ப பாக்குறாங்க. எல்லோருக்குமே தெரியும். கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டு காலம் சரியான வருமானம் இல்லை, எல்லோரும் பாதிப்படைந்தார்கள், பாதிப்பிலிருந்து மீள்கின்ற வரை, அவர்கள் இயல்பு நிலைக்கு வருகின்ற வரை…  இந்த கட்டணம் எல்லாம் உயர்த்த கூடாது, அதுதான் முறை. அதுதான் ஒரு அரசனுடைய கடமை. மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு, பொருளாதாரத்தை புரிந்து கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |