சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை உள்ளது. அங்கு 80 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிநாடு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி முத்துமாரி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.