தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.. தற்போது இவர் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி மகன் தனக்கு அட்வைஸ் செய்வது குறித்து பேசினார். அதாவது ஒரு நாள் என் மகன் கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவனிடம் சாரிடா உங்க அப்பன் காசு சம்பாதிச்சு வச்சிருக்க அதனால நீ இப்படி கெட்டு போற, ஆனா எங்க அப்பா அப்படி கிடையாது எங்க அப்பா காசு சேர்த்து வைக்கல. இப்போ நான் காசு சேத்து வச்சு இருக்கேன் அதனால நீ கெட்டு போற என்ன பண்றதுன்னு தெரில எப்படியாவது திருந்திடு என்று கேட்டேன். அதற்கு என் மகன், அது உன் மிஸ்டேக்பா நா என்ன பண்ணட்டும் என கூலாக எனக்கு அட்வைஸ் பண்ணிட்டான் என்று அவர் கூறியுனார்.