Categories
சினிமா தமிழ் சினிமா

“அதே டெய்லர், அதே வாடகை” ஒரே மாதிரி உடை அணிந்த கீர்த்தி மற்றும் சமந்தா….. வடிவேலு ஸ்டைலில் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையின் மூலம் விஜய், சூர்யா, விக்ரம் மற்றும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்த மகாநதி என்ற திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயுதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் போட்டோ சூட் நடத்தி மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதேபோன்று மார்டன் உடையில் சமந்தாவும் சில நாட்களுக்கு முன்பாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் வடிவேலு படத்தில் வருவது போன்று அதே டெய்லர், அதே வாடகை என்று 2 பேரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Categories

Tech |