பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனாவின் மூன்றாவது அலைகள் பரவி வருவதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது முடிவுக்கு வரும் நிலையில் பிரிட்டன் அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலையில் ஒன்று கூடி ‘நீங்கள் அதே மசோதாவை கொள்ளுங்கள்’ என்று கூச்சலிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் போராட்ட களத்திற்கு சென்று பொதுமக்களிடம் கூட்டத்தை கலைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 14 நபர்களை விதிமுறையை மீறிய குற்றத்திற்காக கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.