மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்தி நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.வகையில் இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இந்த ரயில் மீது மாடு மோதி விபத்துக்குள்ளானது. அதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பதினைந்து நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஆறாம் தேதி வாத்துவா ரயில் நிலையத்திலிருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது காட்டெருமை கூட்டம் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மீண்டும் கால்நடை மீது மோதியதில் முன் பகுதி சேதம் அடைந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக மாடு மோதி ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.