மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர்கள், மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கமாட்டோம் என படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மீன்வள மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.
இதனையடுத்து மீனவர்கள் குறிப்பிட்ட வகையான மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கருதுகின்றனர். இதனால் தங்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்பதால் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடியை ஏற்றி மீன்வள மசோதாவுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என கூறுகின்றனர்.