ஆற்றிற்கு குளிக்கச் சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி பவானி ஆற்றிற்கு தனது அக்கா செல்வியுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போதும் துணி ஒன்று ஆற்றில் நழுவி சென்றுள்ளது. அதனை எடுக்க சென்ற நந்தினி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நீச்சல் தெரியாத காரணத்தினால் நந்தினி ஆற்றில் மூழ்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுற்றி இருந்தவர்கள் நந்தினியை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. எனவே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோபி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினியை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் நந்தினியின் சடலம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பங்களாபுதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.