அமெரிக்காவில் நபர் ஒருவர் தன் மனைவிக்கு அரசு அளித்த நிதியுதவியை தன்னிடம் தராததால் 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானாவில் வசிக்கும் 25 வயது இளைஞர் Malik Halfacre. இவரது மனைவி Jenettirus Moore. இவருக்கு நிதி உதவியாக அரசாங்கம் 1,400 டாலர்களுக்கான காசோலை வழங்கியுள்ளது. இதனை தன்னிடம் தருமாறு Malik, மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் Moore தான் மட்டும் தான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்று கூறி காசோலையை கணவரிடம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் 450 டாலர்கள் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் Moore அந்த பணத்தை எப்படி அடைய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை எடுக்கிறேனா? இல்லையா? என்று நீயே பார் என்று கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து Malik துப்பாக்கியுடன் மறுநாள் வீடு திரும்பியுள்ளார்.
அதன் பிறகு வீட்டில் இருந்த நபர்களை சரமாரியாக சுட்டுவிட்டு தன் ஆறு மாத குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடியுள்ளார். இதில் Malik ன் 7 வயது மகள், தம்பி, உறவினர் ஒருவர் மற்றும் அவரின் தாய் போன்றோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Moore மட்டும் முதுகில் பாய்ந்த குண்டுடன் வெளியே ஓடிவந்து அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்பு Mooreவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து தன் குழந்தையுடன் வேறு ஒரு வீட்டில் மறைந்திருந்த Malik ஐ காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இவர் மீது நான்கு கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.