தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து காஜல்அகர்வால் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
நான் மகான் அல்ல படத்திற்கு பின் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் காஜல் அகர்வால். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களின் மூலமாக முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்குப் பின் படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் தற்போது கைவசம் பல படங்களை வைத்து இருக்கின்றார்.
காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கின்றார். அதில் வருங்காலத்தில் நிறைய விஷயங்கள் ஒரு தாயாக உனக்கு நான் கற்றுத் தர இருக்கிறேன். ஆனால் நீ எனக்கு ஏற்கனவே நிறைய விஷயங்களை கற்றுத் தந்திருக்கின்றாய். அதிலும் குறிப்பாக தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுத் தந்திருக்கின்றாய்.
மேலும் என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணர செய்து இருக்கின்றாய். என் சிறிய இளவரசனே, நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் எனக்கு நீங்கள் தான். மேலும் அதனை என்றும் மறந்து விடாதீர்கள் என நீண்ட பதிவாக பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.