Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதை கேட்டா குடுக்க மாட்டியா..! தாயை கொடூர கொலை செய்த மகன்… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் பணம் தராத கோபத்தில் மகன், தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி கிராமத்தில் கைலாசம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு மலர்கொடி, புஷ்பா என்ற 2 மகள்களும், செல்வராஜ் உட்பட மூன்று மகன்களும் உள்ளனர். இதில் செல்வராஜ் கடைசி மகன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கைலாசம் ஏற்கனவே இறந்த நிலையில் சோலையம்மாள் புறநகர் அரணாரை பிரிவு சாலை விநாயகர் தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே அரசு பணியில் தட்டச்சராக 2-வது மகள் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அரசிடமிருந்து பணபலன்களை பெறுவது தொடர்பாக செல்வராஜுக்கும், சோலையம்மாளுக்கும் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

அதில் சோலையம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சம் பணப்பயன் நிதி வழங்கப்பட்டது. செல்வராஜ், வழக்கில் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தாய் சோலையம்மாள் வீட்டிற்கு சென்று அந்த பணத்தை கேட்டுள்ளார். அதில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு புஷ்பாவின் மகள் நந்தினியும் இருந்தார். அப்போது சோலையம்மாளை, செல்வராஜ் வீட்டுக்கு வெளியே வருமாறு அழைத்துள்ளார். அதன்பின் சோலையம்மாவின் கழுத்தை தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்தார்.

அதனை தடுக்க நந்தினி முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவரை தடுக்க முடியவில்லை. இதில் ரத்த வெள்ளத்தில் சோலையம்மாள் சரிந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து செல்வராஜ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சோலையம்மாளின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு காரணமான செல்வராஜை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |