Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதை திறக்க அனுமதி வேண்டும்…. சுகாதாரமாக நடத்தப்படும்…. கலெக்டரிடம் மனு….!!

டாஸ்மாக் பார்களை திறக்ககோரி உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மதுபானகூட திண்பண்ட பொருட்கள் விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் சந்திரசேகர், செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் இந்த மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 160 இடங்களில் பார்கள் இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் பார்கள் அடைக்கப்பட்டது. இதனால் இட வாடகை, மின்கட்டணம், பணியாளர்கள் சம்பளம் என வருமானம் இன்றி செலவு செய்து வருகின்றோம்.

ஆகவே எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் பார்களை சீக்கிரமாக திறக்க வேண்டும் என்றும் உரிமை தொகையை குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் பார்கள் திறந்தால் சாலையில் நின்று கொண்டு மது அருந்துவது தவிர்க்கப்படும். ஆகவே அரசு அறிவிக்கும் வழிமுறைகளை கடைபிடித்து சுகாதாரமான முறையில் பார்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |