Categories
சினிமா தமிழ் சினிமா

“அதை வைத்து தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுகிறார்”…. விஷால் குறித்து பேசிய உதயநிதி….!!!!

லத்தி திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் விஷால் தனது கெரியரிலேயே முதல்முறையாக திருமணமாகி 7 வயது சிறுவனுக்கு தந்தையாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் இவரின் மனைவியாக சுனைனா நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி பேசியதாவது, லத்தி ஜார்ஜ் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள். சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கின்றோம். நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால் இதுவரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம். கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம். அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல முடியாது.

விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தற்போது பிரமோஷன் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான். நான் அண்மையில் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் சண்டை காட்சி, பாட்டு என எதுவும் இருக்காது. நான் தேர்வு செய்யும் படங்களில் சண்டை வராது. ஆனால் விஷால் எனக்கு நேர்மாறாக இருப்பான். இத்திரைப்படத்தில் நடிக்கும் பொழுது விஷாலுக்கு நிறைய அடிபட்டது. இவ்வளவு மெனக்கெடலக்கு வாழ்த்துக்கள். இத்திரைப்படத்தை பார்த்தால் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கின்றது. அவ்வளவு ஆக்சன் காட்சிகள் இருக்கின்றது. அதேபோல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதை வைத்து தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

Categories

Tech |