Categories
லைப் ஸ்டைல்

அத்தனை நோயும் இந்த காயை சாப்பிட்டா ஓடிடும்… படிச்சா தினமும் சாப்பிடுவீங்க…!!!

உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் அதலைக்காய் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இவற்றில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

அது மட்டுமன்றி பல நோய்களுக்கும் இது மருந்தாக அமைகின்றன. அதன்படி உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் அதலைகாய் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது.

உடல் எரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் அதலைகாய் தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம். குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. வயிற்று பிரச்சினையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக பிரச்சனையையும் தடுக்கும். எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்வது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.

Categories

Tech |