Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவைக்குத்தான் லீவ் எடுக்குறோம்…. ஆப்சென்ட் போடாதீங்க… போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை சுங்கத்தில் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக ஓட்டுனர், கண்டக்டர் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுங்க பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் சுப நிகழ்ச்சி,குடும்ப நிகழ்ச்சி, இறப்பு உட்பட சொந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு விடுமுறை எடுத்தால் கூட ஆப்சென்ட் என்று பதிவு செய்யபடுகிறது. இப்படி பதிவு செய்யும் கிளை மேலாளரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி முழக்கங்கள் எழுப்பினார்கள்.

இதையடுத்து அவர்களிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதில்  57 பேருக்கு ஆப்சென்ட் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம் அனைவருக்கும் இந்த பிரச்சனை சரி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள்.

Categories

Tech |