Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்காக…. 200 மாநகரப்பேருந்துகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் நேற்று தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |