ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அங்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பால், மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரத்து முடங்கி இருப்பதால் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.