கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு புறம்பாக சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வள துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களின் படங்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் சும்மாதான் பாலசுப்பிரமணி அறிவித்தார். இருப்பினும் சில மீனவர்கள் தொடர்ந்து சுருக்கும்படி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகிறார்கள். இதனால் மற்ற மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுருக்கும்படி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மீன்வளத்துறை இயக்குனர் வேல்முருகன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் அறிவுவேந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ராஜங்கம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழுவினர் இரண்டு விசைப்பலகை நேற்று காலை கடலில் ரோந்து பணிக்கு சென்றனர்.
அப்போது தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் 30 படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த படகுகளில் மீனவர்கள் சுருக்கும்படி வலைகளுடன் மீன் பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். அப்போது அதிகாரிகள் குழுவினர் அந்த படகுகளில் இருந்து வலைகளை பறிமுதல் செய்ய முயன்றனர். அதிகாரியை கண்டதும் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்கி வேகமாக புறப்பட்டனர். உடனே அதிகாரிகள் உங்களிடம் 30 படகுகளை விரட்டினர். ஆனால் புதுச்சேரி மாநில எல்லைக்குள் கடல் பகுதிக்கு மீனவர்கள் சென்றனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட சுருக்கும்படி வலையுடன் கடலூர் மாவட்ட எல்லைக்குள் நுழையக்கூடாது. மீறி நுழைந்தால் சுருக்கும்படி வலை மட்டுமில்லாமல் படகுகளும் பறிமுதல் செய்யப்படும் என்று மீனவர்களுக்கு எச்சரித்துவிட்டு அதிகாரிகள் குழுவினர் கடலுருக்கு திரும்பி சென்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகம், நல்லவாடு, தாழங்குடா, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, அக்கரைகோரி, தேவனாம்பட்டிணம், எம்.ஜி.ஆர். திட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுருக்குமடி வலை மற்றும் அதிக திறன் கொண்ட என்ஜின் படகுகளை 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.