தெலுங்கானா மாநிலத்தில் செல்போனில் படம் பிடித்த இளைஞரை மாணவி செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். சில காம கொடுரர்கள் செய்யும் செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்குச் சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார். \
அப்போது ஆட்டோவின் பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அந்த மாணவியை தன் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதுபற்றி அந்த மாணவி தனது ஊர் மக்களிடம் கூறினார். இதுபற்றி அறிந்த ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து பலத்த அடி கொடுத்தனர். அது மட்டுமன்றி அந்த மாணவியை வைத்து புகைப்படம் எடுத்த இளைஞரை செருப்பால் அடிக்க வைத்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அந்த மாணவி இளைஞரை செருப்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.