Categories
தேசிய செய்திகள்

அத்துமீறிய கார் டிரைவர்… தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்… டிரைவர் செய்த கொடூர செயல்…!!!

டெல்லியில் விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை காரின் டிரைவர் காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளியுள்ளார்.

டெல்லியில் தில்லா குவாணி பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த காவலர், விதி மீறலில் ஈடுபட்ட ஒரு காரின் டிரைவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது காரின் டிரைவர் காரை எடுத்துள்ளார்,வாகனத்தை தடுத்து நிறுத்த காரின் முன்பகுதியில் காவலர் சென்றுள்ளார். இருந்தாலும் அந்த வாகனத்தை டிரைவர் தொடர்ந்து இயக்கியதால், காவலர் பேனட்டில் பிடித்துக் கொண்டுள்ளார். அவரே சில மீட்டர்கள் அப்படியே இழுத்துச் சென்றுள்ளார் டிரைவர்.

அதுமட்டுமன்றி கார் வேகமாக சென்றதால் சில மீட்டர்களில் அந்த காவலர் கீழே விழுந்துள்ளார். அருகில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அந்த காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலையில் விதி மீறலில் வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Categories

Tech |