Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நடந்து கொண்ட சித்தப்பா….. கர்ப்பமான 11-ஆம் வகுப்பு மாணவி…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டிமடை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜன் கோவையை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என ராஜன் மாணவியிடம் கூறியுள்ளார். இதனால் மாணவி யாரிடமும் நடந்தவற்றை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளிடம் விசாரித்த போது சித்தப்பா உறவுமுறை உள்ள ராஜன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து கோவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளியங்கிரிக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

Categories

Tech |