சீன போர் விமானங்கள் தங்களது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சீனாவும் தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பிரிந்தது. இருப்பினும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுவதை வழக்கமாக வைத்து வருகிறது.
அந்த வகையில் தைவான் சீன போர் விமானங்கள் தங்களது நாட்டுக்குள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும் சீனாவிற்கு சொந்தமான 2 ஜே-11 ரக போர் விமானங்கள், ஜே-16 ரக போர் விமானங்கள் தங்களது நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காரணத்தினால் தைவான் அரசு தங்களது போர் விமானங்களை அனுப்பி அந்த சீன போர் விமானங்களை துரத்தியடித்தாகவும் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தைவான் அரசு கூடுதலாக 9 பில்லியன் அமெரிக்க டாலரை ராணுவத்திற்கு செலவிட விருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.