Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்….. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!!

மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஆத்தூர் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(75) என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டியை தாக்கி நகையை பறித்த குற்றத்திற்காக அரசப்பன்(31) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |