சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்படா வயல் பகுதியில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 8- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து விக்னேஷ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் விக்னேஷுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு தமிழக அரசு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.