அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பார்வையற்ற பெண்ணின் வீட்டிற்குள் ராஜ்மோகன் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிந்த போலீசார் ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் ராஜ்மோகனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
Categories