அரசு பள்ளியில் நுழைத்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையப்பட்டி வள்ளுவர் நகரில் பிரவின்(20) என்பவர் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி மொபட்டில் சென்றுள்ளார். இதனை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி(59) தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பிரவீன் தலைமை ஆசிரியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் உடனடியக மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பள்ளியில் அத்துமீறி நுழைத்து தகராறில் ஈடுபட்ட பிரவீரை கைது கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.