பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அசோக் நகரில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் யுவராணிக்கும் உறவினரான தங்கமணி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து தங்கமணியின் மகனான மாதேஷ் என்பவர் யுவராணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த யுவராணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து யுவராணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாதேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.