Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பாலியல் தொல்லை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (29) என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரான்சிஸ் சேவியரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இதற்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலைமிரட்டல் விடுத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சார்பில் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |