சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சிவகுருநாதபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சார்லஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சார்லஸ் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சார்லசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.