நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களை, வரும் 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்பகுதிக்குள், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு என்ஜின் பழுதானதோடு, பலத்த காற்றும் வீசியதால், படகு திசைமாறி இந்திய கடற்பகுதிக்கு அவர்கள் வந்தனர். பாஸ்போர்ட் இல்லாமல், அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் வந்த அந்த 3 பேரையும், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யான்சன், ரீகன், குருபரன் ஆகிய 3 பேரையும், வரும் 18-ம் தேதி வரை, சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி லிசி உத்தரவிட்டார்.