உக்ரேன் தலைநகரிலுள்ள உலகின் 2 ஆவது உயரமான டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது தொடர்ந்து 6-வது நாளாக படையெடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதிலும் முக்கியமாக உக்ரைனிலுள்ள அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத் துறை அலுவலகங்களின் மீது ரஷ்யா ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சிக்கி தலைநகர் கீவ் மற்றும் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நேற்று கார்கிவ்வின் மத்திய சதுகத்தின் மீது ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்துள்ளது. இவ்வாறு இருக்க உக்ரேனின் தலைநகர் கீவிலுள்ள உலகின் 2 ஆவது உயரமான டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் தெரிவித்துள்ளார்.