சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு போச்சம்பள்ளியில் இருக்கும் அத்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், அத்தை மகளான 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராஜ்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமியை கடத்தி சென்று வனப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.