Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத உடனே ஆஃப் பண்ணுங்க….. வாங்க நம்ம எல்லாரும் சேர்ந்து பாடலாம்…. கோவை கலெக்டரின் அசத்தல் செயல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ் சமீரன் என்பவர் இருக்கிறார். இவர் நிர்வாக ரீதியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏதேனும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அதோடு தினசரி களப்பணிகளையும் மேற்கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் துப்புரவு பணியாளர்களுக்கு சரியான உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இதனால் உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு துப்புரவு பணியாளர்களை தூய்மையற்ற முறையில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது எனவும் கூறினார். இந்நிலையில் சமீப காலமாகவே அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலெக்டர் கலந்து கொள்கிறார்.

அந்த வகையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது ரேடியோவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது கலெக்டர் சமீரன் உடனடியாக ரேடியோவை நிறுத்துங்கள் என்று கூறி விட்டு, அனைவரும் சேர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடலாம் என்றார். இதற்கு விழாவில் இருந்தவர்களும் சம்மதம் தெரிவித்து மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடினர். இந்த செயல் பல்வேறு தரப்பினரையும் தற்போது கவர்ந்துள்ளது. மேலும் கலெக்டரிடம் நிர்வாக ரீதியாகவும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |