ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, மாநிலத்திற்கு மாநிலம் இட ஒதிக்கீடு முறை மாறும். அண்ணல் அம்பேத்கர் 125வது ஆண்டு பிறந்தநாளை மத்திய அரசாங்கம் வருடம் முழுவதும் கொண்டாடியது. அம்பேத்கார் வாழ்ந்த வீடு, அவர் இறந்த வீடு, அவர் லண்டனில் படித்த வீடு, அவர் கடைசியாக இருந்த அலிப்பூர் ரோட்டில் இருக்கிற வீடு இதை அனைத்தையும் பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
200 கோடி செலவில் டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் இன்டர்நேஷனல் ரிசர்ச் சென்டருக்கு 2015 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2017ஆம் ஆண்டு மக்களுக்காக அர்ப்பணிதார்.பாஜகவை தவிர அம்பேத்கர் பற்றி பேசுவதற்கான யாருமே இல்லை. அம்பேத்காரின் 125ஆவது பிறந்த தினதில் மத்திய அரசாங்கம் எவ்வளவோ செஞ்சி இருக்கு. அம்பேத்கர் அவர்கள் பெயரில் ஆப் வெளியிட்டு இருந்தோம்.
அம்பேத்கர் பெயரில் பத்து ரூபாய் நாணயம் வெளியிட்டு இருந்தோம். இத்தனை சிறப்புகளை பாரதிய ஜனதா கட்சிதான் செஞ்சுள்ளது. இன்று அதிகளவுல பட்டியலின எம்பிக்கள் இருக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. பட்டியலின மக்களுடைய நலன்களில் ரொம்ப அக்கறை கொள்வது பாரதிய ஜனதா கட்சிதான், திமுக கிடையாது என்பதை ஆணித்தனமாக சொல்கின்றேன். சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை என்று எல். முருகன் தெரிவித்தார்.