Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அநியாயமா இப்படி செத்துட்டாரு..! நஷ்ட ஈடு கோரிய குடும்பம்… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றம் விபத்தில் பலியான டிராக்டர் டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 18 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டிராக்டர் டிரைவரான தர்மராஜ் ( 48 ) வசித்து வந்தார். இவர் அதே ஊரில் வசித்து வரும் பந்தல் காண்டிராக்டரனா திருநாவுக்கரசுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி திருவொற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு பந்தல் சாமான்களை ஏற்றி கொண்டு டிராக்டரில் திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் இரவு 8 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது வேகமாக மோதியது.

அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பலியானவருடைய குடும்பத்தினர் சார்பில் நஷ்ட ஈடு கேட்டு சார்பு நீதிமன்றத்தில் வக்கீல் கார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி முருகன், விபத்தில் பலியானவருடைய குடும்பத்திற்க்கு 7.5 சதவீத வட்டியுடன் ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை மதுரை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Categories

Tech |