நடிகர் யோகி பாபு அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதுன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது .
இதில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, சமுத்திரகனி, வனிதா, ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .