நடிகர் சமுத்திரக்கனி தனது பிறந்தநாளை அந்தகன் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . தற்போது அந்தகன் படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Wishing my brother @thondankani Blessed birthday tons of love on the sets of #Andhagan the pianist family @SimranbaggaOffc @PriyaAnand @actorthiagaraja @iYogiBabu @vanithavijayku1 @ksravikumardir @onlynikil @manobalam pic.twitter.com/fHjWfuzHsN
— Prashanth (@actorprashanth) April 26, 2021
மேலும் இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, மனோபாலா, கே எஸ் ரவிகுமார், செம்மலர், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், பூவயார், லீலா சாம்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி அந்தகன் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .