நடிகை வனிதா அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் அந்தகன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.
ஆனால் ஒரு சில காட்சிகள் மட்டும் ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வனிதா விஜயகுமார் அந்தகன் படத்தின் தனது காட்சிக்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தியாகராஜன், வனிதா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.