தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்கள் அனைத்து விற்று தீர்ந்து விட்டது. அடுத்த 10 நாட்களுக்கு 90% டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது. இந்நிலையில் படக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய விக்ரம், இந்தியா முழுவது நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது. இதுபோன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது. எனக்கு பிடித்த ஆதித்தன் கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்தன் கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக இருந்து கொண்டு இருக்கிறது. அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து நான் நடித்தேன். பொன்னியின் செல்வனின் இது சிறந்த காதல் காவியமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.