தவறு செய்பவர்களுக்கு தண்டனைகள் வழங்குவது அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து வரும் ஒன்றாகும். உலகம் முழுவதும் குற்றவாளிகள், எதிரிகள் (அல்லது) விரும்பத்தகாதவர்களைக் கொலை செய்ய பல்வேறு மோசமான, பயங்கரமான முறைகள் இருக்கின்றனர். கொடூரமான குற்றங்களுக்குக்கூட தற்போது நம் நாட்டில் மரண தண்டனை விதிப்பது கடினமாக உள்ளது. இதற்கு முன்னதாக மனித வரலாற்றில் கொடுக்கப்பட்ட தண்டனைகளில் மாயிலிங் டூ டெத் ஒன்றாகும்.
அந்த தண்டனை என்னவென்றால் ஒரு மனிதரை உள்ளடக்கக்கூடிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதற்குள் குற்றம் செய்யப்பட்ட நபரை இறக்குவார்கள். இதையடுத்து அந்த பாத்திரத்தின் அடியில் நெருப்பை பற்ற வைப்பார்கள். ஆகவே குற்றம் செய்தவர்கள் கொதிக்கும் தண்ணீரில் உயிரோடு வேக வைப்பார்கள். இதுபோன்ற ஒரு தண்டனையை அந்தக் காலத்தில் பணத்திற்காக கொலை செய்தவர்களுக்கும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இது போன்ற கொடூரமான தண்டனைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.