ஐஸ்வர்யா ராஜேஷ் தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் தங்க மெடல் பெற்ற சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது . இந்த படத்தை ஜெயசீலன் தவப்புதல்வி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக பரவிய தகவலுக்கு அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தில் சாந்தி சௌந்தரராஜன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.