சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியரிடம் நீதிபதி நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பெண்கள் அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆளாவது சகஜமாகிவிட்டது. இதற்கான தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இந்த பிரச்சனை மட்டும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதியே பாலியல் வன் கொடுமை செய்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மோஹித் சுபாஷ் என்பவர் மின்சாரத் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய உறவினர் பெண்ணான பள்ளி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று மோகித் சுபாஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறினார். இல்லையெனில் நீங்கள் உங்கள் வேலையை இழந்து சிறைக்கு செல்ல நேரிடும் என்று கூறி நீதிபதி தெரிவித்தார். இந்தக் கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணை என்னால் திருமணம் செய்ய இயலாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.