அந்தமானில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,223 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 2,823 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.