அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மாலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற பகுதியில் இருந்து 510 கி.மீ தொலைவில் இன்று மாலை 3 மணிக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில நடுக்கவியல் மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.