Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவில் 2 வது முறை நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு….!!!!!!

அந்தமான் நிகோபார் தீவில் 2 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கம் மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 7.02 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது  என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.  இது குறித்து  தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே என்ற பகுதியில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ. தொலைவில் இன்று மாலை 4.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி இருக்கிறது.  ஒரே நாளில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Categories

Tech |