Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்தம்மா முகத்துல முழிக்க பிடிக்கல”…. அதையெல்லாம் நீங்க பெருசு படுத்தாதீங்க…. மழுப்பலாக பேசிய அண்ணாமலை…!!!!

சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை மேற்குவங்க ஆளுநர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதே விழாவில் மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டிருந்தார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ள கூடாது என்பதில் மிகவும் திட்டவட்டமாக இருக்கிறேன்.

இதற்குக் காரணம் அம்மாநிலத்தில் பாஜக கட்சியின் தொண்டர்கள் துன்புறுத்தப்படுவது தான். நான் இல. கணேசனை இன்று அல்லது நாளை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவேன் என்று கூறினார். அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழகத்தில் நடத்துவதற்கு காரணம் கலவரத்தை தூண்டும் எண்ணம் தான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருந்தது குறித்து கேட்டார். அதற்கு அண்ணாமலை அடிக்கடி கட்சி மாறுபவர்கள் தங்களுடைய கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்காக அப்படித்தான் பேசுவார்கள். ஒரே கட்சியில் நிலையாக இருப்பவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பற்றி நன்றாக தெரியும். கட்சி மாறும் சேகர்பாபு அதிமுக கட்சியில் இருந்தபோது திமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என நெஞ்சை தொட்டு சொல்லட்டும் பார்ப்போம்

. அவர் திமுகவுக்கு விசுவாசம் ஆக இருப்பதற்காக அப்படி எல்லாம் பேசுகிறார். வடமாநிலங்களில் நடந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததே ஆர்எஸ்எஸ் இயக்கம் தான். ஆர்எஸ்எஸ் மீது அபாண்டமான பொய்யை சுமத்துகிறார்கள். தான் சாப்பிடுகிற வீட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சேகர் பாபு அப்படி கூறுவதால் அவருடைய பேச்சை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து தீவிரவாத தாக்குதல் என்பதை நிரூபித்ததே பாஜக தான். திமுக அரசு சிலிண்டர் விபத்து என்று கூறி மூடி மறக்க நினைத்ததை தீவிரவாத தாக்குதல் என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக பாஜகவுக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார்.‌

Categories

Tech |